இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள அம்போனிலிருந்து தெற்கே 163 கி.மீ. தொலைவில் அதிகாலை 1.42 மணிக்கு 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் மாலுகுவில் உள்ள பல தீவுகளில் உணரப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் பதிவாகவில்லை. அத்துடன் நல்வாய்ப்பாக சுனாமி எச்சரிக்கையைத் தூண்டிவிடவில்லை.
பரந்துவிரிந்த பசுபிக் பெருங்கடலின் 'ரிங் ஆஃப் ஃபயர்' (நெருப்பு வளையம்) என்றழைக்கப்படும் இந்தோனேசியாவில் உலகெங்கிலும் இல்லாத அளவிற்கு நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.