தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஒரு நாளில் 40, சில வாரங்களில் 150: மாஸ் காட்டும் ஆப்கன் ராணுவம் - ஆப்கனில் சரணடைந்த தாலிபான்கள்

காபூல்: ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரின் தீவிர நடவடிக்கையால் கடந்த சில வாரங்களில் மட்டும் 150க்கும் மேற்பட்ட தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர்.

Taliban militants surrendered
Taliban militants surrendered

By

Published : Jan 23, 2020, 12:02 AM IST

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை ஒடுக்க ராணுவத்தினர் தங்கள் நடவடிக்கைகளை தீவிரபடுத்தியுள்ளனர். அதன்படி ஆப்கன் ராணுவமும், காவல் துறையும், புலனாய்வுத் துறையும் ஒருங்கிணைந்து பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அதன்படி கோர் மாகாணத்தின் மேற்கு பகுதியிலுள்ள ஷாஹ்ராக் மாவட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, செவ்வாய்கிழமை (ஜனவரி 21) ஒரே நாளில் மட்டும் சுமார் 40 தாலிபான்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு ராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 150க்கும் மேற்பட்ட தாலிபான்கள் சரணடைந்துள்ளதாக ஆப்கன் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இப்போதுள்ள தாலிபான்கள் ஆப்கன் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீய செயல்களில் ஈடுபட்டுவருவதால் முன்னாள் தாலிபான்கள், தங்கள் தவறை உணர்ந்து அமைதியை நோக்கி திரும்புகின்றனர் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாலிபான்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டுவதால், இம்மாதத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய தாலிபான்கள் சரணடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குப் பரவும் கொரோனா வைரஸ்!

ABOUT THE AUTHOR

...view details