கிழக்கு தென் கொரியாவிலுள்ள கடற்கரை நகரமான டோங்காவிலுள்ள ஒரு விடுதியில் நேற்று (சனிக்கிழமை) நிகழ்ந்த சிலிண்டர் வெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த விடுதியின் இரண்டாவது தளத்தில், கேஸ் சிலிண்டர் வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக டோங்ஹேயி தீயணைப்புத்துறை அலுவலர் யூன் ஜே- கேப் தெரிவித்துள்ளார்.