பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அனோனாஸ், அரானிட்டா ரயில் நிலையங்கள் இடையே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கொண்டன. சனிக்கிழமை (18.05.2019) உள்ளூர் நேரப்படி இரவு 9.15 மணிக்கு நடைபெற்ற இந்த விபத்தில் 34 பேர் படுகாயமடைந்தனர் என மணிலா நகர ரயில்வே நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் ஹெர்னாண்டோ காப்ரெரா தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரயில்கள்
மணிலா: பிலிப்பைன்ஸில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 34 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரயில்கள் மோதி கொண்ட ரயில்கள்
இதன் காரணமாக, இரு ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவை இன்று காலை வரை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், படுகாயமடைந்தவர்களில் ஐந்து பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர் என்றும், மற்றவர்கள் வீடு திரும்பினர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பாக மணிலா ரயில்வே நிர்வாகம் தீவிர விசாரணையை கையிலெடுத்துள்ளது.