ஜப்பான் நாட்டின் புகுஷிமா மாகாணத்தில், ரிக்டர் 7.3 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் 7.1 என நிலநடுக்கம் அளவு கணக்கிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் 7.3 என கணக்கிடப்பட்டது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, இரவு 11.08 மணியளவில் புகுஷிமா அருகே பசிபிக் கடலில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டபோதும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது. 30க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேசிய தலைமை அமைச்சரவை செயலாளர் கட்சுனோபு கடோ, " வலுவான நிலநடுக்கம் காரணமாக, சுமார் 950,000 வீடுகளுக்கு மின்சார வசதி பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன" எனத் தெரிவித்தார்.