காத்மாண்டு: மத்திய நேபாளத்தில் அமைந்துள்ள சிந்துபால்கோக் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக 20 பேர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.
நேபாளத்தின் சிந்துபால்கோக் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவருகிறது. இதற்கிடையில், அங்கு பனிப்பாறை ஒன்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கனவெள்ளத்தில் இதுவரை 20 பேர் மாயமாகியுள்ளனர். அதில் மூன்று பேர் இந்தியர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மற்ற 17 பேரில் மூவர் சீனர்கள் ஆவார்கள். மீதமுள்ளவர்கள் நேபாளத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன. இந்தத் தகவலை மாவட்ட நிர்வாக அலுவலர் அருண் பொக்ரெல் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “மழை வெள்ளத்தில் மாயமானவர்களை தொடர்ந்து தேடிவருகிறோம். மாயமான வெளிநாட்டினர் தவிர நேபாளவாசிகள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன” என்றார்.
இதையும் படிங்க:கன மழை: குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்!