ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் அந்நாட்டு அரசுக்கு இடையே மோதல் நீண்டகாலமாகவே நடைபெற்று வருகிறது. அங்கு இரு தரப்புக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திவைக்கும் முயற்சியில் களமிறங்கிய அமெரிக்கா, முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
அமைதி ஒப்பந்தத்திற்குப்பின் இரு தரப்பும் தொடர்ந்து மோதல் போக்கையே கடைப்பிடித்துவருகின்றன. இந்நிலையில், அங்கு ரமலான் மாதத்தின் காரணமாக இரு தரப்பும் போர் நிறுத்தத்தை கடைபிடித்தன. தற்போது ரமலான் மாதம் முடிந்துள்ள நிலையில் மீண்டும் அங்கு தாக்குதல் அரங்கேறத் தொடங்கியுள்ளன.