சிச்சுவான் மாகாணத்தின் மேற்கு பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 3,800 மீட்டர் உயரத்தில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இதனை அணைக்கும் முயற்சியில் 600க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
சீனாவில் தீயணைப்பு வீரர்கள் 24 பேர் பலி! - forest
பெய்ஜிங்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீயா அணைக்க போராடும் தீயணைப்புத் துறை
இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சீனா ராணுவம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மீட்புப்பணிகளை விரைந்து மேற்கொள்ள இரண்டு ஹெலிகாப்டர்கள் புறப்பட்டு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.