கொழும்பு:இலங்கை அதிபரின் அதிகாரங்களைக் குறைக்கும் பொருட்டு கடந்த 2015ஆம் ஆண்டு அரசியலமைப்பில் 19ஆவது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இதனை மாற்றும் நோக்கில் தற்போது நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பின் 20ஆவது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேற்றிரவு (அக் 22) இந்தச் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக 156 எம்பி.,க்களும், எதிராக 65 எம்பி.,க்களும் வாக்களித்துள்ளதாகத் தெரிகிறது.
சிறுபான்மையினர் மற்றும் பிரதான கட்சிகளின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா சபாநாயகர் மஹிந்த யாப அபேவர்தன ஒப்புதல் அளித்த பிறகு சட்டமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.