தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு- இருவர் உயிரிழப்பு, 28 பேர் காயம்! - குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் அரசு அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இருவர் உயிரிழந்தனர்.

Pakistan blast southwestern Pakistani city Quetta blast Deputy Commissioner of Quetta Aurangzeb Badini Kashmir Solidarity Day rally பாகிஸ்தான் குண்டுவெடிப்பு பலுசிஸ்தான் குண்டுவெடிப்பு குண்டுவெடிப்பு பாகிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு
Pakistan blast southwestern Pakistani city Quetta blast Deputy Commissioner of Quetta Aurangzeb Badini Kashmir Solidarity Day rally பாகிஸ்தான் குண்டுவெடிப்பு பலுசிஸ்தான் குண்டுவெடிப்பு குண்டுவெடிப்பு பாகிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு

By

Published : Feb 6, 2021, 5:35 PM IST

குவெட்டா: பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இருவர் உயிரிழந்தனர். காயமுற்ற 28 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா மற்றும் சிபி ஆகிய நகரங்களில் வெள்ளிக்கிழமை குண்டுவெடித்தது. சிபி நகரில் உள்ள முதல் குண்டுவெடிப்பில் 24 பேர் காயமுற்றனர். இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் குவெட்டாவில் அடுத்த குண்டு வெடித்தது. இதில் இருவர் உயிரிழந்த நிலையில், இருவர் காயமுற்றனர். இந்தக் குண்டுவெடிப்புகளில் காயமுற்ற 28 பேருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து விசாரணை நடந்துவருவதாக குவெட்டா மாநகர காவல் துணை ஆணையர் ஓளரங்கசிப் பதினி தெரிவித்தார்.

இதையும் படிங்க: இஸ்ரேல் தூதரக குண்டுவெடிப்பு வழக்கு என்ஐஏக்கு மாற்றம் - மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details