இன்றைய நாளை (அக்டோபர் 22) காஷ்மீருக்குள் இந்தியப் பாதுகாப்புப் படை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி 72ஆம் ஆண்டு கறுப்பு தினம் என பாகிஸ்தானில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் மக்கள் அமைதிப் பேரணி நடத்தி அனுசரித்துவருகிறார்கள்.
இந்த ஆண்டு கறுப்பு தின அமைதிப் பேரணிக்காக பல்வேறு கட்சிகள் அழைப்புவிடுத்தன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் இந்த அமைதிப் பேரணி ஒரு கட்டத்தில் ஆர்ப்பாட்டமாக மாற, காவல் துறையினர் தடியடி நடத்தினர்.