கிழக்கு இந்தோனேசியாவில் 28 பேருடன், அதிக பாரத்தை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்து இன்று விபத்திற்குள்ளானது. இதில் இரண்டு குழந்தைகள் நீரல் மூழ்கி உயிரிழந்தனர். மேலும், படகில் இருந்த ஏழு பேரை காணவில்லை என்று காவல் துறை அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் உயிரிழப்பு - நீரில் மூழ்கி காணாமல் போன ஏழு பேர்
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.

2-dead-7-missing-after-boat-sinks-in-indonesia
படகு விபத்து
அருகிலுள்ள கப்பல்களில் இருந்த படகு குழுவினர் உயரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களையும், விபத்திற்குள்ளான 19 பேரையும் மீட்டுள்ளனர். மேலும், காணாமல் போனதாக கூறப்பட்ட ஏழு பேரை மீட்புக் குழுவினர் தேடிவருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.