பாகிஸ்தானில் உள்ள ஷேக்குப்ரா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 29 சீக்கியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகணத்தில் சீக்கியர்கள் பலர் வசித்து வரும் நிலையில் அங்குள்ள புனிதத் தலத்திற்கு மினி பஸ் ஒன்றில் சீக்கியர்கள் பயணம் மேற்கொண்டனர்.
அப்போது ரயில்வே லெவல் க்ராசிங்கை கடக்கும் போது ஷா ஹுசைன் விரைவு ரயில் பேருந்து மீது மோதியதில் அதில் பயணம் செய்த 29 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.