ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபானின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது. அங்கிருந்து அமெரிக்கா தனது படையை திரும்பப் பெற தொடங்கிய நிலையில், தலிபான்கள் பல நகரங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர்.
அஸ்ரப் கனி தலைமையிலான அரசுக்கு எதிரான நடவடிக்கையில் தலிபான்கள் களமிறங்கியுள்ளது, ஆப்கான் பாதுகாப்பு படையினருக்கு புது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தாகர் உள்ளிட்ட பிராந்தியம் உள்ளிட்ட பல பிராந்தியங்களை தலிபான் கைப்பற்றியுள்ளது.
தாகர் பிராந்தியத்தில் உள்ள தலுகான் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான்களுக்கும் நடைபெற்ற மோதலில் 20 தலிபான்கள் கொல்லப்பட்டனர். ஒரு பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார்.
தலிபான்களின் நடவடிக்கைகளுக்கு ஆப்கான் அரசு ஒருபோதும் அஞ்சாது, ஒருபோதும் அரசை அவர்களால் கைப்பற்ற முடியாது என ஆப்கான் அதிபர் அஸ்ரப் கனி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:அணு ஒப்பந்த நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை - ஈரான் திட்டவட்டம்