தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நேபாளம் பேருந்து விபத்தில் 14 பேர் உயிரிழப்பு - பேருந்து விபத்தில் 14 பேர் பலி

நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர்.

14-killed-in-bus-accident-in-nepal
14-killed-in-bus-accident-in-nepal

By

Published : Mar 10, 2022, 3:26 PM IST

காத்மாண்டு: நேபாளத்தின் கிழக்கே உள்ள மடியிலிருந்து 20 பயணிகளுடன் ஜாப்பாவில் உள்ள டமாக் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து வழியில் 300 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 14 பேர் உயிரிழந்தனர். ஐந்து பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில், இந்த விபத்து காலை 7:30 மணியளவில் நடந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் உதவியுடன் 5 பேர் உயிருடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது. நேபாளத்தில் சாலை விபத்துகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாகவிட்டன.

கடந்த மாதம் நேபாளத்தின் மேற்கே, புதுமணத் தம்பதிகள் ஏற்றிச் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 8 பேர் உயிரிழந்தனர். இதேபோல கடந்தாண்டு நேபாளத்தில் உள்ள சிந்துபால்சவுக் மாவட்டத்தில் உள்ள சுன்கோஷி பகுதியில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்தில் 14 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தேர்தல் வெற்றிக்கு முன்கூட்டியே தயாரான ஆம் ஆத்மி!!!

ABOUT THE AUTHOR

...view details