தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

10 வருடங்களாகக் கடையின் மேற்பகுதியில் குடியிருந்த 13 அடி நீள மலைப்பாம்பு! - 13 feet phython hiding store for 10 years

சீனா: சான்செங் பகுதியில் உள்ள ஸ்பா கடையின் மேற்பகுதியில் 10 வருடங்களாக மலைப்பாம்பு குடியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலைப்பாம்பு

By

Published : Nov 20, 2019, 3:31 PM IST

சீனாவின் சான்செங் பகுதியில் உள்ள பிரபல ஸ்பாவில் பாம்பு கடையின் மேற்பகுதியிலிருந்து கீழே விழுந்ததைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பாம்பைப் பார்த்ததும் ஸ்பாவின் உரிமையாளர் ஒரு நிமிடம் உறைந்து போகியுள்ளார்.

ஏற்கெனவே, உரிமையாளரிடம் பத்து வருடங்களுக்கு முன்பு பாம்பு இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், அவர் அதை நம்ப வில்லை. பிறகு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்பாவை புதுப்பிக்கும் போதும் பாம்பு இருப்பதை கட்டட வல்லுநர்கள் பார்த்துத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பாம்பைப் பார்த்தும் உடனடியாக காவல் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அறையின் விளக்கை அணைத்து விட்டு, போர்வையைச் சுற்றி பாம்பைப் பிடித்தனர்

பின்னர் ஆய்வாளர்கள் கூறுகையில், ’இந்த பாம்பு 13 அடி இருந்துள்ளது. அதன் உண்மையான வயது தெரியவில்லை. பல ஆண்டுகளாக மேற்பகுதியில் சுற்றித் திரிந்த எலிகளைச் சாப்பிட்டு வாழ்ந்திருக்கலாம். சில நேரங்களில் பாம்பு கண்டிப்பாக இரையைத் தேடி கீழே வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. தற்போது, ஜாங்ஷன் உயிரியல் பூங்காவிற்குப் பாம்பை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 'படையப்பா' ஸ்டைலில் பாம்புடன் டிக் டாக் - கடிவாங்கி துடித்த இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details