ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய உருஸ்கான் மாகாணத்தின் தாரின்கோட் மற்றும் கிசாப் மாவட்டங்களில் நேற்றிரவு ஆப்கானிஸ்தான் ராணுவம் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டது. இதில், தலிபான் கிளர்ச்சியாளர்கள் 12 கொல்லப்பட்டதாகவும், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் 205ஆவது (அடல்) கார்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை: தலிபான் கிளர்ச்சியாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்
காபூல்: உருஸ்கான் மாகாணத்தில் நடந்த சிறப்பு ஆப்கானிய ராணுவ நடவடிக்கையில் 12 தலிபான் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக 205ஆவது (அடல்) கார்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை: தலிபான் கிளர்ச்சியாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்
ஆப்கானிஸ்தான் அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து தலிபான்கள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
உருஸ்கானில் உள்ள கிசாப் மற்றும் தே ராவூத் மாவட்டங்களில் ஆப்கானிய படைகளுக்கும் தலிபானுக்கும் இடையே கடந்த மூன்று மாதங்களாக மோதல் நடந்துவருகிறது. இதில், ஆப்கானிய படைகளிடமிருந்து சில பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர்.