இந்தியப் பெருங்கடலில் உருவான ஃபோனி புயல் ஆந்திராவின் சில கடலோரப் பகுதிகளையும், ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வர், புரி உள்ளிட்ட நகரங்களையும் புரட்டிப்போட்டது. இதில் ஒடிசாவில் முக்கிய ரயில் நிலையங்கள், செல்போன் கோபுரங்கள், மின் கோபுரங்கள் உள்ளிட்டவை பெரும் சேதத்திற்கு உள்ளாகின.
வங்கதேசத்தை வச்சு செஞ்ச ஃபோனி புயல்! 12 பேர் சாவு
டாக்கா: வங்கதேசத்தை புரட்டிப்போட்டுள்ள ஃபோனி புயலால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
12 பேர் பலி
இந்நிலையில், வங்கதேத்தை சின்னாபின்னமாக்கியுள்ள ஃபோனி புயலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமான 19 மாவட்டங்களில் நான்காயிரத்து 71 மையங்களில் சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, இந்த ஃபோனி புயலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Last Updated : May 4, 2019, 3:56 PM IST