ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பின் சார்பில் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு மக்களின் உணவு பாதுகாப்பு மிகவும் மோசமான சூழலுக்கு உள்ளாகியிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வறிக்கையின்படி, தற்போதைய சூழலில் சுமார் ஒரு கோடியே 22 லட்சம் நபர்கள் உணவு பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் எனத் தெரியவந்துள்ளது. மேலும், ”நாட்டின் ஊட்டச்சத்துக் குறைபாடு 16 விழுக்காடு உயர்ந்து, சுமார் ஒன்பது லட்சம் பேர் ஊட்டசத்து குறைபாட்டில் உள்ளனர்.