டெல்லி:கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ் என்று மக்களிடையே பீதியை கிளப்பியது.
இந்த தொற்றுகளும் ஓய்ந்த நிலையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் வெறும் 2 வாரத்தில் 100 நாடுகளுக்கு பரவியுள்ளது.
இதனால் உலக நாடுகள் பல்வேறு நாடுகளிடையே விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளது. அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் வரும் வெள்ளி வரை 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, திங்களன்று சுமார் 3,000 விமானங்களும், செவ்வாய் அன்று 1,100 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாள்களில் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 653ஐ எட்டியுள்ளது. இதனால் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:இஸ்ரேலில் தீயாய் பரவும் ஒமைக்ரான்