அமெரிக்காவின் ஃபார்ச்சூன் இதழ், வருட வருடம் அதிக வருவாய் ஈட்டும் 500 நிறுவனங்களின் பெயர்களை வெளியிடும். இந்த வருடம் வெளியிடப்பட்டுள்ள ’ஃபார்ச்சூன் குளோபல் 500’ பட்டியலில் சீன ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியாளர் சியோமி முதன்முதலாக இடம்பெற்றுள்ளது.
ஃபார்ச்சூன் குளோபல் பட்டியலில் சியோமி! - ஃபார்ச்சூன் சீனா 5௦௦
வாஷிங்டன்: சீன ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியாளரான சியோமி, 2019ஆம் ஆண்டிற்கான 'ஃபார்ச்சூன் குளோபல் 5௦௦' பட்டியலில் முதன்முதலாக நுழைந்துள்ளது
2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் தொடங்கப்பட்ட சியோமி நிறுவனம், இந்த ஃபார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் 468ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் ஃபார்ச்சூன் சீனா 500 பட்டியலில் சியோமி 53ஆவது இடத்தைப் பிடித்ததுள்ளது. உலகின் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியாளரான சியோமி, கடந்த ஆண்டில் 26,443.50 மில்லியன் டாலர் வருவாயையும், 2,049.10 மில்லியன் டாலர் நிகர லாபத்தையும் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து சியோமியின் நிறுவனர் லீ ஜூன் கூறுகையில், "ஃபார்ச்சூன் பட்டியலில் நுழைய சியோமிக்கு ஒன்பது ஆண்டுகள் மட்டுமே பிடித்தது. இதற்காக எங்கள் ரசிகர்களுக்கும் பயனர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த பட்டியலில் உள்ள இளைய நிறுவனம் சியோமி தான்" என்றார்.