கரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்தை கண்டுபிடிக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறிவருகின்றனர். இதனிடையே, மலேரியா நோய்க்கு கொடுக்கப்படும் ’ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ என்ற மருந்தை கரோனா வைரஸ் நோய்க்கு இந்திய ஆராய்ச்சி மருத்துவக் கழகம் பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து, அம்மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்தது.
’ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ மருந்தை இந்தியா அதிகளவில் தயாரித்துவரும் நிலையில், இந்த ஏற்றுமதி தடையை திரும்பப் பெற வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில், ஏற்றுமதி தடையை திரும்பப் பெறாவிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சிரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், "இதுகுறித்து அவரிடம் (மோடி) பேசினேன். மற்ற நாடுகளுக்கு இந்தத் தடை தொடர்கிறது என்பது எனக்கு தெரியும். இந்தத் தடை அமெரிக்காவுக்கு தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தத் தடை நமக்காக தளர்த்தப்பட்டால் நான் ஆச்சரியம் அடைய மாட்டேன். தடையை திரும்ப பெறாவிட்டால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: உலக சுகாதார தினம்: தூய்மைப் பணியாளர்களுக்கு பிரதமர் நன்றி!