அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் டெலாவேர் கவுண்டியில் உள்ளது, கொலம்பஸ் உயிரியல் பூங்கா. இந்தப் பூங்காவில் உள்ள 6 வயதான கிபிபி (kibibi) சிறுத்தையினால் வயது முதிர்வு காரணத்தினால், இயற்கையாக குழந்தைப் பெற முடியாத சூழல் உருவானது.
இதனால் பூங்கா ஊழியர்கள், கிபிபி சிறுத்தையின் கருமுட்டைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, கொலம்பஸ் வனப்பூங்காவின் ஆய்வகத்தில் உரமூட்ட கடந்த நவம்பர் 19 ஆம் தேதி வைக்கப்பட்டது. பின்னர் ஆரம்ப கட்ட கருக்கள் 3 வயதான இஸி சிறுத்தைக்குள் பொருத்தப்பட்டது.
இந்நிலையில், இஸி சிறுத்தை செயற்கை கருத்தரிப்பு மூலம் இரண்டு குட்டிகளை ஈன்றதாக கொலம்பஸ் உயிரியியல் பூங்கா சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வாடகை தாய் மூலம் பிறந்த இரண்டு சிறுத்தைக் குட்டிகள் உயிரியியல் பூங்காவின் விலங்கு சுகாதார துணைத் தலைவர் டாக்டர் ராண்டி ஜங்கே கூறுகையில்,"இஸி சிறுத்தை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குட்டிகளை ஈன்றுள்ளது. இதற்கு முன்பு மூன்று முறை விஞ்ஞானிகள் இதை முயற்சி செய்தும் தோல்வியில் தான் முடிந்தது. இம்முறை தான் வெற்றி கிடைத்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க:அதிர்ச்சி : ஈரான் சுகாதாரத் துறை இணை அமைச்சருக்கு கொரோனா !