சீனாவில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, சீனாவைத் தவிர இத்தாலி, தென் கொரியா போன்ற நாடுகளில் வைரஸ் தொற்றால் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.
இந்த வைரஸ் தொற்றால் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. முதல் ஒரு லட்சம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட மூன்று மாதங்கள் வரை ஆனதாகவும் அதே நேரத்தில் அடுத்த ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட வெறும் 12 நாள்களே ஆனதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஏழு புதிய நாடுகளுக்கு இந்த வைரஸ் தற்போது பரவியுள்ளது.
இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் குறித்து அதிக வருமானமுள்ள நாடுகள் குறைந்த வருமானமுள்ள நாடுகள் என மொத்தம் 13 நாடுகளில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் மேலும் 18 நாடுகள் இணையவுள்ளன.