ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் தேதி உலக மகிழ்ச்சி நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஐ.நா. மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதன் முடிவுகளை பட்டியலிட்டு வருடந்தோறும் வெளியிட்டு வருகிறது.
வருமானம், சுதந்திரம், சமுதாய உதவி, உதவி செய்யும் தன்மை, ஆரோக்கியம் ஆகியவற்றை வைத்து ஐ.நா. இந்த பட்டியலை தயார் செய்கிறது.
இந்நிலையில், இந்த வருடத்திற்கான மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளது. அதில் உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து நெதர்லாந்து இரண்டாம் இடத்திலும், ஐஸ்லாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளது.