தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உணர்வுகளை வென்ற ஈமோஜிக்களின் தினமின்று! - emoji

சர்வதேச ஈமோஜிக்கள் தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இந்த வருடம் புதிய ஈமோஜிக்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

world emoji day

By

Published : Jul 17, 2019, 7:29 PM IST

உலகம் முழுவதும் தற்போது சமூக வலைதளங்களில் மூழ்கியுள்ளது. அதிலும் குறிப்பாக வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவைகளில் ஈமோஜிக்கள் புகுந்து விளையாடும். அன்பு, கண்ணீர், காதல், சண்டை, ஏக்கம், ஏமாற்றம், தவிப்பு உள்ளிட்ட உணர்வுகளை இப்போதைய உலகம் ஈமோஜிக்களாலே வெளிப்படுத்திவருகிறது.

சர்வதேச ஈமோஜிக்கள் தினம்

அதிலும் குறிப்பாக பாசம், மலை உச்சியை எட்டும் அளவிற்கு ஈமோஜிக்கள் மெசேஜ் முழுவதும் பறக்கும். அன்பு பொங்கி காவிரி நீர் போல் ஊற்றெடுக்கும் என்பது ஈமோஜிக்களில் நிதர்சனமானது. பலரது வாழ்வில் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ சிலவற்றை கடத்தி செல்ல ஈமோஜிக்கள்தான் உதவுகின்றன.

அதையடுத்து பண்டிகை நாட்களில் புதிதாக வரும் ஈமோஜிக்கள் அனைவரையும் கவரும். பலரால் சில ஈமோஜிக்கள் பிரபலமாக்கப்படும். உணர்வுகளை மையப்படுத்தும் ஈமோஜிக்கள் மட்டுமல்லாது உணவு, விலங்கு, இயற்கை உள்ளிட்ட பல்வேறு வகையான ஈமோஜிக்கள் வலைதளங்களில் குவிந்துள்ளன.

ஈமோஜிக்கள் தினம்

இந்நிலையில், விரைவில் புது விதமான ஈமோஜிக்கள் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பலரும் புதிய ஈமோஜிக்களுக்கு ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

முன்னதாக மொபைல் வந்ததும் நேரில் சந்தித்து பேசுவது குறைந்தது. அதையடுத்து வாட்ஸ் ஆப் அறிமுகமானதும் மெசேஜ்கள் அதிகமானது. அதிலும் மக்களுக்கு ஈமோஜிக்கள் அறிமுகமானதைத் தொடர்ந்து வித்தியாசமாக, புதுவிதமாக அவர்களை ஈர்த்தது. மக்களும் அதனை பெரிதும் வரவேற்றனர். இப்படி உலகமே கூடி வரவேற்ற ஈமோஜிக்களின் தினம் இன்று!

ABOUT THE AUTHOR

...view details