கரோனா பெருந்தொற்றின் தாக்கம் வளரும் நாடுகளில் பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தப் போவதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. இது குறித்து உலக வங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ் நேற்று (மே 19) விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், பின்தங்கிய நாடுகளில் பல்வேறு திட்டங்கள் மூலம் எளிய மக்களின் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கையில் இத்தனை ஆண்டுகள் செலுத்திய உழைப்பு பின்னடைவை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையின் 70 விழுக்காட்டினர் 100 வளரும் நாடுகளில்தான் உள்ளனர். இந்த நாடுகளைச் சேர்ந்த 6 கோடி மக்கள் கடும் வறுமையால் பாதிக்கும் அபாயம் தற்போது எழுந்துள்ளது என உலக வங்கி கவலைத் தெரிவித்துள்ளது.