இந்தியாவில் கோவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புப் பொருளாதார திட்டத்தைப் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில், கோவிட்-19 தொற்று பாதிப்புகளிலிருந்து மீளும் நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு உதவும் வகையில் 100 கோடி அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ. 7,549 கோடி) வழங்க உலகச் சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்மூலம் உலகச் சுகாதார அமைப்பு கோவிட்-19 பாதிப்புகளுக்காக இந்தியாவுக்கு அளித்துள்ள தொகை 200 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. முன்னதாக, சுகாதாரத் துறைக்கு உதவும் வகையில் 100 கோடி டாலர்களை உலக வங்கி கடந்த மாதம் இந்தியாவுக்கு அளித்திருந்தது.