தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

யோகா செய்ததால் வந்த விபரீதம்: உயிருக்கு போராடும் மாணவி! - தலைகீழாக

கல்லூரி மாணவி ஒருவர் அவரது வீட்டு பால்கனியில் இருந்து சாகச யோகா செய்வதாகக் கூறி தலைகீழாக கீழே விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

mexico

By

Published : Aug 27, 2019, 5:42 PM IST

மெக்சிகோவில் கல்லூரி மாணவி(23) ஒருவர் தனது வீட்டுப் பால்கனியில் இருந்து யோகா செய்துள்ளார். உடனிருந்த அவரது சக தோழியிடம் தான் சாகச யோகா செய்வதாகக் கூறி பால்கனியில் தலைகீழாக நின்றுள்ளார். திடீரென்று பால்கனியில் இருந்து கை நழுவி கீழே விழுந்துள்ளார். தலைகீழாக ஆறாவது மாடியில் இருந்து விழுந்ததில் 110 எலும்புகள் நொறுங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

இதையடுத்து அப்பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 11 மணி நேரம் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. கால், கை, இடுப்பு, தலை உள்ளிட்டவையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அம்மாணவிக்கு அவரது பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் விரைவில் குணமடைந்து நலமடைய வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் இதேபோல் எவரும் யோகா செய்வதாகக் கூறி ஆபத்தான நிலையில் எதிலும் ஈடுபட வேண்டாம் என்று அம்மாணவியின் பெற்றோர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details