பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் குலாலாய் இஸ்மாயில். தேசத் துரோக செயலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இவர், அங்கிருந்து தப்பித்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
நியூயார்க்கில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குலாலாய், "பயங்கரவாதம் ஒழிப்பு என்ற பெயரில் அப்பாவி பஸ்தூன் (சிறுபான்மையினர்) மக்கள் கொல்லப்படுகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை வதை முகாம்களில் அடைத்து, பாகிஸ்தான் ராணுவம் சித்திரவதை செய்துவருகின்றனர். பாகிஸ்தான் போன்று நாட்டில் ராணுவத்திற்கு எதிரான நாம் வாய் திறக்க முடியாது.