வெனிசுவேலாவில் அதிபர் மடூரோவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ தலைமையில் நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
அதிபருக்கு எதிரான போராட்டத்தில் குண்டடிப்பட்ட பெண் உயிரிழப்பு! - venezuela
கராகஸ்: வெனிசுவேலாவில் அதிபர் மடூரோவுக்கு எதிரான போராட்டத்தில் குண்டடிப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குண்டடிப்பட்ட பெண் உயிரிழப்பு
தலைநகர் கராகஸ்ஸில் போராடும் மக்கள் மீது ராணுவ வாகனங்களை ஏற்றியும், அவர்களை சுட்டும் அதிபர் மடூரோவின் அரசு அட்டுழியத்தில் ஈடுபட்டுள்ளது. இதில் தலையில் குண்டடிப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே, போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஜூவான் குவாய்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.