அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் வரும் பிப்ரவரி 24, 25ஆம் தேதகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். குறிப்பாக குஜராத்தில் அகமதாபாத், ஆக்ரா, டெல்லி ஆகியப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் "வணக்கம் ட்ரம்ப்" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில், கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெற்ற, இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அதில்,"நாங்கள் இந்தியா செல்லவுள்ளோம். அங்கு மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட வாய்ப்புள்ளது. ஆனால், தனக்கு நல்ல ஒப்பந்தமாக அது கிடைக்காவிட்டால், இது குறித்த பேச்சுவார்த்தைகள் மந்தமடையக்கூடும்" என்று சுட்டிக்காட்டினார். " தேர்தலுக்குப் பிறகு நாங்கள் அதைச் செய்வோம். அதுவும் நடக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன். எனவே, என்ன நடக்கிறது என்று பார்ப்போம்," என்றார்.