தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா பாக்தாதியின் கொலை?

தனது அரசியல் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ள போராடிவரும் ட்ரம்பிற்கு பாக்தாதியின் கொலை பயனளிக்கும், ஆனால் உலக மக்களுக்கு அதனால் எந்தப் பயனுமில்லை.

By

Published : Nov 1, 2019, 1:42 PM IST

Updated : Nov 1, 2019, 2:36 PM IST

Baghdadi

தீயவை ஒழிந்து நல்லவை வெற்றிபெற்ற நாளான தீபாவளியன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலகை உலுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அது என்னவென்றால் அமெரிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கையில், ஐஎஸ் பயங்கரவாதத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார் என்பதுதான். பல நாடுகளை ஒன்றிணைத்து தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தி இஸ்லாமிக் ஸ்டேட் என்ற நாட்டை உருவாக்குவதே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நோக்கமாக இருந்துவந்தது. இந்த பயங்கரவாத அமைப்பு அதன் பெயரை 2014ஆம் ஆண்டு இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) என மாற்றிக் கொண்டது.

Trump

பாக்தாதியின் தலைக்கு 2.5 கோடி அமெரிக்க டாலரை பரிசாக அந்நாட்டு அரசு அறிவித்தது. சிரியாவில் உள்ள ரக்கா என்ற பகுதியின் மீது அமெரிக்கப் படை தாக்குதல் நடத்தியபோது பாக்தாதி இறந்திருக்கலாம் என்று ரஷ்யா அறிவித்த போதிலும், அவர்களின் கூற்றை ட்ரம்ப் மறுத்தார். ஐ.எஸ். அமைப்பை அழிக்க பூர்வக்குடி மக்களான குர்து உதவியை அமெரிக்கா நாடியது. ரஷ்யா, ஈராக், துருக்கி ஆகிய நாடுகளின் வான்வெளியைப் பயன்படுத்தி சிரியாவின் இத்லிப்பில் பதுங்கியிருக்கும் பாக்தாதியை 8 அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தாக்கின.

American Troops

இதன் விளைவாக பாக்தாதி சுரங்கப்பாதை வழியாகத் தப்பி இறுதியில் தற்கொலை செய்துகொண்டார். அமெரிக்கப் படைகளின் முழு நடவடிக்கையையும் நேரடியாகப் பார்த்ததாகக் கூறிய ட்ரம்ப், டி.என்.ஏ. பரிசோதனை நடந்து 15 நிமிடங்களுக்குள் பாக்தாதி இறந்துவிட்டதாக அறிவித்தார். உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் வரும் விமர்சனங்களைத் தவிர்க்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது இதன் மூலம் தெரியவருகிறது. ஆனால் ஐ.எஸ். தலைவரின் மரணம் பயங்கரவாதக் குழுவிற்கு ஒரு முடிவுதானா என்று மக்கள் இன்னும் ஆச்சரியப்படுகிறார்கள்.

Trump, Baghdadi
9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ஜார்ஜ் புஷ்ஷின் முதல் முக்கிய உரையில், இந்த சோகத்தை நம் நடவடிக்கைக்கான அழைப்பாகக் காணுமாறு அமெரிக்கர்களுக்கு அறைகூவல் விடுத்தார். மேலும் “இந்த நாடு அமைதியானது, ஆனால் கோபத்தைத் தூண்டினால் கொந்தளித்துவிடும். மற்றவர்களால் தொடங்கப்பட்ட இந்தப் போர், நாம் நினைத்தால் மட்டுமே முடிவடையும்" என்றார்.
9/11 தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான், அதன் ஆதரவு அமைப்பான அல்கொய்தா ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தம் தொடங்கப்பட்டது. தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க படையினர் வெற்றிகண்ட பிறகு, அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தான் பாதுகாத்து வந்தது. ராணுவ நடவடிக்கையின் மூலம் பின்லேடன் கொல்லப்பட்டதை 2011ஆம் ஆண்டு ஒபாமா அரசு பெருமையுடன் அறிவித்தது.

Obama

லேடன் கொல்லப்படுவதைவிட பாக்தாதி கொல்லப்படுவது மிக முக்கியமானது என்ற ட்ரம்ப்பின் அறிவிப்பு விமர்சனங்களை ஈர்த்த போதிலும், ஐ.எஸ். அமைப்பால் தூண்டப்பட்ட பயங்கரவாதம் உலக நாடுகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தின. இஸ்லாமியர்களின் உரிமைகளை சமரசம் செய்யும் சீனா, இந்தியா, பாலஸ்தீனம், சோமாலியா, எகிப்து, ஈராக், ஈரான், பிலிப்பைன்ஸ், மொராக்கோ போன்ற நாடுகள் தங்களின் கொள்கைகளை விரிவுப்படுத்த ஐ.எஸ். அமைப்பு அழைப்பு விடுத்தது.

ஐ.எஸ். அமைப்பின் தலைவராக பாக்தாதி செயல்படுத்திய கொடூரமான, மனிதாபிமானமற்ற செயல்களுக்கு ஈடு-இணையே கிடையாது எனப் பார்க்கப்படுகிறது. பாக்தாதியின் மரணம் மட்டுமே பயங்கரவாத அமைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற அனுமானங்கள் தவறானவை. ஜனநாயக கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க பாக்தாதியின் அழைப்பு மேலும் பயங்கரவாத அமைப்புகளின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.

குஜராத் உள்ளிட்ட மேற்கு இந்தியாவின் சில பகுதிகளைக் கைப்பற்ற ஐ.எஸ். அமைப்பு ஐந்தாண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டிருந்தது. மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகள் - இந்தியாவின் அஸ்ஸாம், காஷ்மீர் போன்ற பகுதிகளை கைப்பற்றுவதற்கான தனது திட்டங்களை அல்கொய்தா அறிவித்துள்ளது. லேடனின் மரணத்திற்குப் பிறகும் அவரது அமைப்பு துடிப்பாக இயங்கிவருவது இதன்மூலம் தெரியவருகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யா அதிபர் புதின்

பாக்தாதியால் கட்டமைக்கப்பட்டுவந்த இஸ்லாமிய கலீபா அகற்றப்பட்டுவிட்டதாக அமெரிக்கா பெருமையுடன் அறிவித்தபோதிலும், ஐ.எஸ். அமைப்பு ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் ரத்தக்களரி ஏற்படுத்தியது. பாக்தாதியின் வன்முறை செயல்களாலும் கோரசன் மாகாணத்தை அடைய வேண்டும் என்ற அவரது கனவாலும் பல இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர்.

Talibans holding Laden postures

தனது அரசியல் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ள போராடிவரும் ட்ரம்பிற்கு பாக்தாதியின் கொலை பயனளிக்கும், ஆனால் உலக மக்களுக்கு அதனால் எந்தப் பயனுமில்லை. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் தலைவரே பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்கவின் நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளதாக அறிவித்துள்ளார். பாக்தாதி கொல்லப்பட்டதை தனது சாதனையாக ட்ரம்ப் அறிவித்துக்கொண்டாலும், பயங்கரவாதத்தின் தாக்கம் அதிகரித்துவருகிறது என்ற நிதர்சனமான உண்மையை யாராலும் மறுக்கமுடியாது.

இதையும் படிங்க: பாக்தாதி சுட்டுக்கொள்ளப்பட்டதை உறுதி செய்தது 'ஐஎஸ்ஐஎஸ்' அமைப்பு

Last Updated : Nov 1, 2019, 2:36 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details