கரோனா பெருந்தொற்று தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த தொற்று ஒவ்வொரு நபரின் உடல்நிலைக்கேற்ப மாறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்துவது, மருத்துவ நிபுணர்களை திக்குமுக்காட வைத்து வருகிறது.
இது தொடர்பாக ஆய்வுத் தகவல் ஒன்றை அமெரிக்காவின் தேசிய சுகாதார இயக்குனர் பிரான்சிஸ் காலின் தற்போது வெளியிட்டுள்ளார். அதில், மனிதர்களின் ரத்த மாதிரிகளுக்குத் தகுந்தாற்போல், இந்த வைரஸ் பாதிப்பு மாறுபட்டத் தாக்கத்தை ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது.
அதன்படி ’ஏ’ பிரிவு ரத்தவகை கொண்டவர்களுக்கு இந்த வைரஸ் 50 விழுக்காடு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், அதேவேளை ’ஓ’ பிரிவு ரத்த வகைக் கொண்டவர்களின் மேல் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிய வந்துள்ளது.