சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கும் சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் அவ்வப்போது விளம்பரதாரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மார்க்கெட்டிங்கிற்காக பதிவிடுவார்கள். அதன்படி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் உலகளவில் அதிக சம்பளம் வாங்குவதாக நடிகர் டுவைன் ஜான்சன் பெயர் வந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிற்கு 7 கோடியை அள்ளும் ராக்! - டுவைன் ஜான்சன், ஒரு விளம்பரதாரர் பதிவிக்கு ரூ. 7 கோடி
வாஷிங்டன்: இன்ஸ்டாகிராமில் 189 மில்லியன் மக்கள் பின்தொடரும் டுவைன் ஜான்சன், ஒரு விளம்பரதாரர் பதவிக்கு ரூ. 7 கோடி வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமூக ஊடக மார்க்கெட்டிங் நிறுவனமானHopper HQ நடத்திய ஆய்வின்படி, 48 வயதான டுவைன் ஜான்சன் இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரதாரர் பதிவிக்கு சுமார் 1,015,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 7 கோடியே 56 லட்சத்து 78 ஆயிரத்து 450 ரூபாய்) வசூலிப்பதாக கூறப்படுகிறது. இவரை 189 மில்லியன் மக்கள் பின்தொடர்கின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக மொகுல் ஜென்னர், ஒரு விளம்பரதாரர் பதிவுக்கு 986,000 அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் 7 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 209 ரூபாய்) வசூலித்து வருகிறார். அதே போல், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு பதவிக்கு சுமார் 889,000 அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் 6 கோடி 62 லட்சத்து 83 ஆயிரத்து 884 ரூபாய்) எனக் கணக்கிட்டுள்ளனர்
TAGGED:
dwayne johnson latest news