தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உலக சுகாதார அமைப்பு, உலக வங்கியிடம் ஹேக்கர்கள் கைவரிசை: ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல்கள், பாஸ்வேர்டுகள் லீக்! - ஹேக்கர்கள் கைவரிசை கரோனா

வாஷிங்டன்: கரோனாவுக்கு எதிராகப் போராடிவரும் உலக சுகாதார அமைப்பு, உலக வங்கி, கேட்ஸ் அரக்கட்டளை உள்ளிட்ட முன்னணி அமைப்புகளின் தரவுகளை ஹேக்கர்கள் திருடி லீக் செய்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது

hackers WHO
hackers WHO

By

Published : Apr 23, 2020, 4:03 PM IST

உலகை கரோனா வைரஸ் சூறையாடிவரும் வேளையில், அந்நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முயற்சி மேற்கொண்டுவரும் உலக சுகாதார அமைப்பு, வூஹான் தொற்றுநோய் நிறுவனம், கேட்ஸ் அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளின் டிஜிட்டல் தரவுகளை சில கும்பல் ஹேக் செய்திருப்பதாகச் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இணையத்தில் பயங்கரவாதிகள், ஹேக்கர்களின் செயல்களைக் கண்காணிக்கும் அமெரிக்கத் தொண்டு நிறுவனமான சைட் இண்டலிஜென்ஸ் குரூப் நடத்திய இந்த ஆய்வில், பல அமைப்புகளின் பாதுகாப்பு செயல்பாட்டுக்குள் ஊடுருவி திருடிய 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் அஞ்சல் முகவரிகள், பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பிவருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வாமை மற்றும் நோய்த் தடுப்பு மையமான (Centers for Disease Control and Prevention), உலக வங்கி, உலக சுகாதார அமைப்பு எனப் பல அமைப்புகளிடம் ஹேக்கர்கள் கைவரிசை காட்டியுள்ளதாகக் கூறும் சைட், அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமே (National Institute of Health) பெரும் பாதிப்புச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மெரிக்க மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து மட்டும் ஹேக்கர்கள் ஒன்பதாயிரத்து 938 மின் அஞ்சல்கள், பாஸ்வேர்டுகளைத் திருடி இணையத்தில் லீக் செய்திருக்கிறார்கள்.

இது குறித்து சைட் இண்டலிஜென்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் கூறுகையில், "நவீன நாஜிக்களும், வெள்ளை இனவாதிகளும் தனது இந்த தரவுகளைப் பலருக்கு விற்று கோடிக்கணக்கில் லாபம் பார்த்திருப்பதாகத் தெரிகிறது" என்றார்.

இதையும் படிங்க : வூஹானின் யாங்ஸி நதியில் மீண்டும் படகு சேவை!

ABOUT THE AUTHOR

...view details