தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தடுப்பூசி திட்டங்களில் காலதாமதம்... ஆபத்தில் 80 மில்லியன் குழந்தைகள் - எச்சரிக்கும் WHO - WHO Director-General Tedros Adhanom

ஜெனிவா: கரோனா தொற்றால் வழக்கமாக நடத்தப்படும் மற்ற நோய்களுக்கான தடுப்பூசி திட்டங்களில் காலதாமதமாகியுள்ளதால் 80 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

WHO
WHO

By

Published : May 23, 2020, 2:04 PM IST

உலக நாடுகள் அனைத்தும் கரோனாவை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், கரோனாவால் மற்ற நோய்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அனைத்து நாடுகளும் மறந்துவிட்டதாகவும், அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பும், யுனிசெப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "புதிய கரோனா வைரஸ் தொற்றால் எபோலா, மூளைக் காய்ச்சல், தட்டம்மை, போலியோ போன்ற நோய்களுக்கான உலகளாவிய தடுப்பூசி திட்டங்களை வழக்கமாக நடத்துவதை பல நாடுகள் மறந்துவிட்டனர். இதன் விளைவாக, ஒரு வயதிற்கு கீழ் உள்ள 80 மில்லியன் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆய்வின்படி 129 நாடுகளில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நோய்க்கான தடுப்பூசி திட்டத்தினை குறைந்துள்ளாகவும் அல்லது முற்றிலுமாக நிறுத்தியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. கரோனா காலகட்டத்தில் தடுப்பூசி திட்டங்களை எவ்வாறு பாதுகாப்பாக நடத்துவது குறித்து, அனைத்து நாடுகளுக்கும் அடுத்த வாரம் ஆலோசனை வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:'தந்தையைக் கொன்றவர்களுக்கு மன்னிப்பு; தீர்ப்பைக் கடவுள் பார்த்துக்கொள்வார்'

ABOUT THE AUTHOR

...view details