தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிடனைப் போல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி ட்ரம்ப் அல்ல - மெலனியா ட்ரம்ப் - American presidential election

வாஷிங்டன்: ஜோ பிடன், கமலா ஹாரிஸ் போன்று ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி அல்ல என மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Trump
Trump

By

Published : Nov 1, 2020, 4:57 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் செவ்வாய்க்கிழமை (நவ.3) நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். பிடனுக்கு ஆதரவாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா போன்ற முக்கிய தலைவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ட்ரம்ப்க்கு ஆதரவாக அவரது மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலனியா ட்ரம்ப் விஸ்கான்சினில் நேற்று பரப்புரைக் ஈடுபட்டார். அப்போது, ஜோ பிடன், கமலா ஹாரிஸ் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இம்மாதிரியான சூழ்நிலைகளில் நாட்டை ஒன்றிணைப்பதற்கு பதிலாக ட்ரம்பை விமர்சனம் செய்து வருகின்றனர்.

அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ட்ரம்ப், மற்ற நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வு கொண்டதாக பிடன் குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், சீனா சில ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், எங்கள் செயல்பாடுகள் வேறொன்றை பிரதிபலிக்கிறது. ஜோ பிடன், கமலா ஹாரிஸ் போன்று ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி அல்ல.

மற்றவர்கள் போல் வெற்று வாக்குறுதிகள் அளிக்காமல் சிறப்பான ஆட்சியை தந்துள்ளார். நம் பொருளாதாரத்தை காத்து நம்மை காக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஆனால், ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்களோ எனது கணவரை அதிபர் பதவியில் இருந்து நீக்க நேரத்தை செலவழித்து உள்ளனர்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details