உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்தை நெருங்கிவரும் நிலையில் வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்க உலக சுகாதார அமைப்பு சார்பில் தொடர்ச்சியான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக, நோய் பாதித்தவர்களைப் பாதுகாக்கும் வேளையில், வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உலக சுகாதார அமைப்பு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வதே கரோனாவிடமிருந்து தப்பிக்க பிரதான வழி எனத் தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.