ஜெனிவாவில் நேற்று நடந்த இணையவழி செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய டெட்ரோஸ் அதானோம், "கோவிட்-19 தொற்றைச் சமாளிக்க உலக நாடுகளின் சுகாதார அமைப்புகள் திண்டாடி வருகின்றன.
குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்துக்குச் சிகிச்சை பெறமுடியாமல் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. கோவிட்-19 உறுதி செய்யப்பட்டு தீவிர அறிகுறி இல்லாத தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதை யாரும் தடுக்க வேண்டாம்.
கோவிட்-19 வைரஸால் பதின்ம வயதினர், 30 வயதுக்கு உள்பட்டோர் மன அழுத்தம், ஆன்லைன் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை, தேவையற்ற கர்ப்பம் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகும் அபாயமும் அதிகரித்துள்ளது” என்றார்.