தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆய்வு மாதிரிகளை உலக நாடுகளுடன் பகிர்வது அவசியமாகிறது - உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் - World Health Organization

ஜெனிவா: நோய்க்கிருமி சார்ந்த மருந்துகளையும் ஆய்வக மாதிரிகளையும் உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதே இன்றைய அவசிய தேவை என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

WHO
WHO

By

Published : Nov 14, 2020, 11:11 PM IST

உலக சுகாதார அமைப்பின் 77வது கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், நோய்க்கிருமி சார்ந்த மருந்துகளையும் ஆய்வக மாதிரிகளையும் உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வது எவ்வளவு அவசியம் என்பதை கரோனா பெருந்தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது என தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

"இரு நாடுகளுக்கிடையே போடப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இல்லாமலும் நீண்டகால பேச்சுவார்த்தை மேற்கொள்வதுபோல் அல்லாமலும் இது தீர்க்கப்பட வேண்டும். உலக சுகாதார அமைப்பின் இந்த புதிய திட்டத்தின் மூலம் சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் பாதுகாப்பாக சுவிட்சர்லாந்தில் வைக்கப்படும். இதுதொடர்பான பொருள்களை தாங்களே முன்வந்து பகிர்ந்து கொள்ளலாம். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இது வழிவகை செய்யப்படுகிறது.

பெறப்படும் பொருள்களையும் மருந்துகளையும் உலக சுகாதார அமைப்பே பகிர்ந்தளிக்கும். இதற்கு தாய்லாந்து மற்றும் இத்தாலி நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற நாடுகளும் இதில் ஆர்வம் காட்டுகின்றன. எனவே விரைவில் இது ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

பொது சுகாதாரத்தில் நாம் எவ்வளவு குறைவாக முதலீடு செய்கிறோம் என்பதை கரோனா தாக்கம் நமக்கு உணர்த்தியுள்ளது."

இவ்வாறு அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details