உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரசால் (தீநுண்மி) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்குகிறது. 51 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் என்றாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டும் சூழல் உள்ளது. நாளுக்கு நாள் தீநுண்மி பரவல் அதிகரித்துக்கொண்டே வருவதால் உலகம் முழுவதும் ஒருவித அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில் இஸ்லாமியர்களின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹஜ் புனிதப் பயணம் அடுத்த மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது. இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், மக்கா, மதினா நகர்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். தற்போது கரோனா தீநுண்மி பரவிவருவதால் ஹஜ் புனித பயணம் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
வழக்கமாக உலகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் மெக்கா, மதினா நகருக்கு வருகைதருவார்கள். ஆனால், தற்போது கரோனா பரவல் அச்சம் இருப்பதால் ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக அங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.