ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜக அரசு நீக்கி, அம்மாநிலத்தை இரண்டாக பிரித்தது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது.
இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். அதில், இருநாட்டு உறவுகள் குறித்தும், வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதேபோல் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே சுமூகமான தீர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.