தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியா எங்களின் தோஸ்து! சமாளிக்கும் வெள்ளை மாளிகை - அமெரிக்க அதிபர்

இந்திய அரசும் நரேந்திர மோடியும் அமெரிக்காவின் நண்பர்கள்தான் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

வெள்ளை மாளிகை

By

Published : Jul 26, 2019, 3:06 PM IST

கடந்த வாரம் இம்ரான் - ட்ரம்ப் சந்திப்பில், ஜி 20 மாநாட்டின்போது காஷ்மீர் சிக்கலில் மத்தியஸ்தம் செய்யத் தன்னை மோடி கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறினார். இதற்கு நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு வெள்ளை மாளிகையின் ஆலோசகர் கெலியனே கான்வே கூறுகையில், "பாரத பிரதமர் நரேந்திர மோடியுடனும் இந்திய அரசுடனும் எங்களுக்கு நல்லுறவு மேம்பட்ட வகையில் வளர்ந்து-கொண்டிருக்கிறது" என்றார்.

.

ABOUT THE AUTHOR

...view details