அமெரிக்காவில் ஈஸ்டர் திருநாளன்று வெள்ளை மாளிகையில் ஆண்டுதோறும் குழந்தைகளுக்கென பிரத்யேகமான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், 141 ஆண்டு பாரம்பரியமிக்க இந்த வழக்கமானது, நேற்று திங்கள்கிழமை, வெள்ளை மாளிகையில் கடைபிடிக்கப்பட்டது.

இதில், தோட்டத்தில் ஈஸ்டர் முட்டைகள் வீசுவது, ஈஸ்டர் முட்டை வேட்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவி மெலானியாவுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக மெலானியா ட்ரம்ப் இரண்டு புதிய விளையாட்டுகளை அறிமுகம் செய்தது, அங்கு கூடியிருந்த மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளை ஆர்வத்தோடு தேர்தெடுத்து, ஓடி ஆடி மகிழ்ச்சி பொங்க விளையாடினர்.