அமெரிக்காவில் கரோனா வைரஸ் நிலவரம் குறித்து அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்டோர் அடங்கிய கரோனா பணிக் குழு தினந்தோறும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்து வருகிறது.
இதனிடையே, கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ட்ரம்ப், "கரோனா வைரஸை கட்டுப்படுத்த மக்கள் உடலில் கிருமி நாசினியைச் செலுத்தினால் என்ன" எனக் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்தப் பேட்டி மருத்துவர்கள், எதிர்க்கட்சிக்கார்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ட்ரம்ப்பின் இந்தப் பேச்சை விமர்சித்து செய்தித்தாள்களில் கட்டுரைகளும் வெளியாயின.