கோவிட்-19 தொற்றால் தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்க இருக்கிறது. வைரஸ் தொற்றை சமாளிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்துள்ளது.
இந்நிலையில், பயோமெடிக்கல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (BARDA) முன்னாள் இயக்குநர் ரிக் பிரைட் அமெரிக்க அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், ஜனவரி மாத்தில் கோவிட்-19 பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட வேண்டும் என்று தான் எச்சரித்ததாகவும், ஆனால் சுகாதாரத் துறை அலுவலர்கள் தனது கருத்தை அலட்சியம் செய்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.