’ஒரு நாள் ஒரு அதிசயம் போல அது மறைந்து போகப் போகிறது, அது மறைந்துவிடும்’. இவை கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய பொன்னான வார்த்தைகள்.
ட்ரம்ப்பின் திட்டம்
கரோனாவைக் காரணம் காட்டி காய் நகர்த்திய ட்ரம்ப், மக்கள் முறையாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் வரை அதிபர் தேர்தலை தாமதப்படுத்த வேண்டுமெனக் கூறி ஒரு வக்கிரமான திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்தார். முன்கூட்டிய தேர்தல், வாக்களிப்பில் யுனிவர்சல் மெயில் அறிமுகப்படுத்தப்படுவது போன்றவை தனது வாக்குகளை திருடுவதற்கான சதி என்றும் அவர் கடுமையான பரப்புரை செய்தார்.
ஏமார்ந்த ட்ரம்ப்
கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாறு காணாத வகையில் அதிக வாக்குகள் பதிவாகின. ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவான மனநிலையை முக்கியமான மாநிலங்களில் வாக்காளர்களிடையே ஏற்படுத்த அதிகமான வார்த்தைகளை விரயம் செய்து ட்ரம்ப் பரப்புரை செய்தார்.
தன் கையை விட்டு அதிகாரம் நழுவாமல் இருக்க அவர் பல முயற்சிகளைக் தந்திரமாகக் கையாண்டார். அதிபர் தேர்தலில் வென்ற பைடனின் வெற்றியை அமெரிக்க காங்கிரசின் இரு அவைகளால் இறுதி செய்யும்போது, ட்ரம்ப் தனது தோல்விக்கு தானே வியூகம் வகுத்துக் கொண்டார். துணை அதிபர் மைக் பென்ஸ் நடத்தும் தேர்தல் செயல்பாடுகளைத் தடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட ட்ரம்ப், வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த ஒரு கும்பலைத் தூண்டினார்.
வன்முறையின் பிம்பமான ட்ரம்ப்
பறிபோன அதிகாரத்தைத் தக்க வைக்கும் நோக்குடன் ட்ரம்ப், தனது ஆதரவாளர்களை ஜனநாயகக் கோயில் எனப் பல்வேறு விதமாக விவரிக்கப்பட்ட கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்த தூண்டினார். வெள்ளை மாளிகை மீது படையெடுத்துச் சென்ற ட்ரம்ப் ஆதரவாளர்கள் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவையின் மரியாதைக்குரிய உறுப்பினர்கள், இந்த வன்முறைக்கு நடுவில் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக இங்கும் அங்கும் ஓடினர். வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
ட்ரம்ப் தனது ஆதரவாளர்களிடையே பற்றவைத்த வெறுப்பு, வன்முறையின் வடிவமாக கொளுந்துவிட்டு எரிந்தது. அதைத்தான் இத்தாக்குதல் விவரிக்கிறது. இது அமெரிக்காவின் அடிப்படை ஜனநாயக மதிப்புகளுக்கு எதிராக ட்ரம்ப் ஆரம்பித்த பயங்கரவாத தாக்குதல்.
இனவெறிப் போக்கினால் உந்தப்பட்ட அவர், அதை ஆதரிக்கும் வலதுசாரி கும்பல்களைத் தூண்டினார், இதன் மூலமாக வெளிஉலகிற்கு தனது சர்வாதிகார வலிமையை நிரூபிக்க முயன்றார். வெள்ளை மாளிகையை மிருகத்தனமான சக்தியுடன் கைப்பற்றும் முயற்சியால், உலகின் பழமையான ஜனநாயகத்தை நகைப்பிற்குரியதாக ட்ரம்ப் மாற்றினார்.