வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் அலுவலகமாக வெள்ளை மாளிகை நேற்று செய்தித்தொடர்பு செயலர் கெய்லி மெக்கெனமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "அதிபர் ட்ரம்ப் தன் சொந்த வருமானத்திலிருந்து அமெரிக்க சுகாதாரத் துறைக்கு ஒரு லட்சம் டாலரை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளார்" எனக் கூறியவாறே ட்ரம்ப் எழுதியதாகக் கூறப்படும் காசோலையை நிருபர்களுக்குத் தெரியும்படி காட்டினார்.
இதுகுறித்து டெய்லி மெயில் பத்திரிகையிடம் பேசிய வெள்ளை மாளிகை அலுவலர் ஒருவர், "பொதுவாகச் செய்தியாளர் சந்திப்பின்போது போலி காசோலைகள் பயன்படுத்தப்படுவதில்லை. ஆகையால் அது உண்மையான காசோலையாகத்தான் இருக்க வேண்டும்" என்றார்.