தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா வேகமாக பரவ ஒபாமாதான் காரணம் - வெள்ளை மாளிகை தகவல் - பாரக் ஒபாமா வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா வேகமாக பரவுவதற்கு, முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சி காலத்தின் குளறுபடிகளே காரணம் என வெள்ளை மாளிகை புகார் தெரிவித்துள்ளது.

WH
WH

By

Published : May 16, 2020, 7:48 PM IST

Updated : May 16, 2020, 10:02 PM IST

கரோனா வைரஸ் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதன் தாக்கமானது அமெரிக்காவில் தீவிரமாக உள்ளது. உலகிலேயே அதிக பாதிப்பு கொண்ட நாடாகவும், அதிக கரோனா உயிரிழப்பு கொண்ட நாடாகவும் அமெரிக்கா திகழ்ந்துவருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முதல் பதவிக்காலம் தற்போது நிறைவடையவுள்ள நிலையில், கரோனா பாதிப்பு விவகாரத்தால் வரப்போகும் தேர்தலை ட்ரம்ப் எதிர்கொள்வது பெரும் சவாலாக உள்ளது. இதையடுத்து கரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போதை கரோனா தொற்று தீவிரத்திற்கு கடந்த கால ஆட்சியே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்தே பெருந்தொற்று அபாயத்தை எதிர்கொள்ள ட்ரம்ப் அரசு தயாராகிவருகிறது. ஆனால் முந்தைய ஒபாமா ஆட்சி காலத்தில் முறையாக முன்னெடுப்புகள் எதுவும் எடுக்கவில்லை. சுகாதாரத்துறையின் அடிப்படை தேவைகள் அனைத்தும் முந்தைய ஆட்சியில் புறக்கணித்ததன் விளைவே தற்போதைய பரவலுக்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 14 லட்சத்து 85 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் வைரஸ் பாதிப்பின் காரணமாக 88 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க:ஐ.நா.வுக்கு வழங்க வேண்டிய பணத்தை அமெரிக்கா செலுத்த வேண்டும் - சீனா

Last Updated : May 16, 2020, 10:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details